ஜார்ஜியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சனிக்கிழமை நடந்த தேர்தலில், ரஷியாவுக்கு ஆதரவான பிரதமர் இராக்ளி கொபாகிட்ஸ் தலைமையிலான ஆளும் ஜார்ஜியன் ட்ரீம் (ஜிடி) கட்சி 150 இடங்களில் 89 இடங்களை வென்றது. 53.93% வாக்குகள் பெற்றது. எனினும், மேற்கத்திய ஆதரவாளரான அதிபர் சலோமி ஸூரபிச்விலி, இந்த முடிவுகள் சட்டவிரோதமாக உள்ளதாக கூறி விமர்சித்தார். அவர், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஜிடி கட்சி, 2012-ல் ஆட்சியமைத்த பிறகு, மேற்கத்திய நாடுகளுடன் நட்பு உறவுகளை பேணுவதாகக் கூறியது. ஆனால் ‘அந்நிய கையாள்கள் தடுப்புச் சட்டம்’ மூலம் மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்க முயன்றது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம் நடத்தின. இந்நிலையில், தற்போது ஜார்ஜியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.