ரஷ்யாவுக்கான ஜெர்மன் தூதரை ஜெர்மனி திருப்பி அழைத்துள்ளது. ஆளும் கட்சி வலைத்தளங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஆளும் கட்சி வலைதளங்களில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெர்மனி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையம் வழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டிற்கான ஜெர்மன் தூதரை நாடு திரும்பும் படி அறிவித்துள்ளது. அதன்படி, மாஸ்கோவில் உள்ள ஜெர்மன் தூதர் அலெக்சாண்டர் லாம்ஸ்டார்ஃபை விரைவில் ஜெர்மனிக்கு திரும்ப உள்ளார்.