மூன்றே வருடங்களில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது

September 10, 2022

ஐரோப்பாவின் மாபெரும் பொருளாதார நாடான ஜெர்மனியில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் 80 மில்லியன் மக்கள் உள்ளனர். ஆனால், 2026 ஆம் ஆண்டு வாக்கில், அந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் திறமையான பணியாளர்கள் கிடைப்பது கேள்விக்குறியாக இருப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹியூபர்டுஸ் ஹீல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியை, சுற்றுச்சூழல் அடிப்படையில் பாதுகாப்பான நாடாக்கவும், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கவும் திறமையான பணியாளர்களின் தேவை ஏற்பட்டுள்ளது […]

ஐரோப்பாவின் மாபெரும் பொருளாதார நாடான ஜெர்மனியில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் 80 மில்லியன் மக்கள் உள்ளனர். ஆனால், 2026 ஆம் ஆண்டு வாக்கில், அந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் திறமையான பணியாளர்கள் கிடைப்பது கேள்விக்குறியாக இருப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹியூபர்டுஸ் ஹீல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியை, சுற்றுச்சூழல் அடிப்படையில் பாதுகாப்பான நாடாக்கவும், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கவும் திறமையான பணியாளர்களின் தேவை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்காக, ஜெர்மன் அரசாங்கம், குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக அறிவித்தார்.

திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஜெர்மனியில் பணி செய்ய வெளிநாட்டினார் வரவேற்கப்பட்டுள்ளனர். பொதுவாக, ஜெர்மனியில் 8 ஆண்டுகள் தங்கியிருந்து பணி செய்யும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்படும். தற்போது, அந்த கால அளவு 5 ஆண்டுகளாக குறைக்கப்பட உள்ளது. அத்துடன், திறம்பட செயலாற்றும் வெளிநாட்டினருக்கு, மூன்றே வருடங்களில் ஜெர்மன் குடியுரிமை வழங்கப்படும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜெர்மனி நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என்று நம்பப்படுகிறது.

ஜெர்மன் அரசின் இந்த அறிவிப்பு பல வெளிநாட்டினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திறமையான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையால், சமீபத்தில், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் குடியேற்ற விதிகளை எளிமையாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu