ஹவுதி படையினரை எதிர்க்க செங்கடலுக்கு வரும் ஜெர்மனியின் போர்க்கப்பல்

February 9, 2024

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. எனவே, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ஹவுதிகளை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஜெர்மனியின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்று, ஹவுதிகளை எதிர்ப்பதற்காக செங்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், தனது எல்லைக்குள் நுழைந்து விட்ட சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் […]

ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. எனவே, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ஹவுதிகளை எதிர்த்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஜெர்மனியின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்று, ஹவுதிகளை எதிர்ப்பதற்காக செங்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், தனது எல்லைக்குள் நுழைந்து விட்ட சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் போன்ற நாடுகளின் படைகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, ஜெர்மனி சார்பாக ஃபிரிகேட் ஹெஸ்ஸி என்ற சக்திவாய்ந்த போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில், 400 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை கண்காணிக்கும் ரேடார் வசதி, 160 கிலோமீட்டர் தொலைவிற்கு பாயும் ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் ஆகியவை உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu