தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் 4 ரஷ்ய தூதரகங்களை மூடுவதற்கு ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ஜெர்மனி தூதரகங்களில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்திற்கு பிறகு 350 க்கு மேல் இருக்கக் கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, ஜெர்மனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ரஷ்யாவின் அறிவிப்பு காரணமாக, ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ஜெர்மனி கலாச்சார மையங்கள், ஜெர்மனி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வெளியேற வேண்டியுள்ளது. மேலும், ரஷ்யாவில் உள்ள 3 ஜெர்மனி தூதரகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இருநாட்டு தூதரக நடவடிக்கைகளில் சமநிலையை கொண்டு வருவதற்காக, ஜெர்மனியில் உள்ள ரஷ்ய தூதரகங்களை மூட உத்தரவிடப்படுகிறது.” இவ்வாறு ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கிரிஸ்டோபர் பர்கர் தெரிவித்துள்ளார். மேலும், எஞ்சியுள்ள தூதரக வசதிகளைக் கொண்டு, இருநாட்டு உறவை தொடர்வதில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.














