பாலஸ்தீனத்துக்கான ஐ.நா பிரிவுக்கு ஜெர்மனி நிதியுதவி

April 25, 2024

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா நிதி உதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்துக்கான ஐ.நா பிரிவை சேர்ந்தவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் அதனை நிரூபிக்கவில்லை. எனவே அந்த பிரிவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதி உதவியை மீண்டும் தொடர உள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது ஐநா பாலஸ்தீனப் பிரிவு பணியாளர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்புள்ளது என்று இஸ்ரேல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பிரான்ஸ் […]

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா நிதி உதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா பிரிவை சேர்ந்தவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் அதனை நிரூபிக்கவில்லை. எனவே அந்த பிரிவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதி உதவியை மீண்டும் தொடர உள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது ஐநா பாலஸ்தீனப் பிரிவு பணியாளர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்புள்ளது என்று இஸ்ரேல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கலோனாவின் தலைமையில் விசாரணை நடந்தது. அதில் போதுமான ஆதாரங்களை இஸ்ரேல் தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த அமைப்புக்கு நிதி உதவி மீண்டும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு இந்த அமைப்பு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டி இருந்தது. அதையடுத்து சில ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக ஐநா அமைப்பு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அந்த அமைப்புக்கான நிதி உதவியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu