ஜெர்மனியில் நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

January 31, 2024

ஜெர்மனியில் நாளை முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை திட்டம் தொடங்க உள்ளது. ஜெர்மனி அதன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைவான வேலை நேரத்தை பின்பற்ற உள்ளது. அதன்படி நாளை முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை திட்டத்தை செய்து பார்க்க உள்ளது. மீதமுள்ள மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த திட்டம் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் […]

ஜெர்மனியில் நாளை முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை திட்டம் தொடங்க உள்ளது.

ஜெர்மனி அதன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைவான வேலை நேரத்தை பின்பற்ற உள்ளது. அதன்படி நாளை முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை திட்டத்தை செய்து பார்க்க உள்ளது. மீதமுள்ள மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த திட்டம் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் அடையும். இதன் மூலம் அவர்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. முன்னதாக இந்த திட்டத்தை செயல்படுத்த பல தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது இது சோதனை முயற்சியாக நாளை முதல் தொடங்க உள்ளது. இது நல்ல பலனை அளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த திட்டத்தில் சுமார் 45 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இது அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் குறைந்த பணியாளர்கள் பிரச்சனையும் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இந்த நடைமுறை நல்ல பலன்களை அளித்துள்ளதாக அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன, உலகின் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, டென்மார்க், ஸ்பெயின், ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த குறைவான வேலை நேரத்தை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu