ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
லுப்தான்சா ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனம் ஆகும். இந்த விமான நிறுவனத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. பல நாடுகளுக்கு விமான சேவைகள் நடக்கிறது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆயிரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை ஜெர்மனி இடையே விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், சுமார் ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,இந்த போராட்டம் ஜெர்மனியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 7 மணி வரை இது நடைபெறும் என்று விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.














