பாலியல் கடத்தல் தண்டனைக்கு எதிராக கிஸ்லைன் மேக்ஸ்வெல் மேல்முறையீடு

July 8, 2022

முன்னாள் சமூகவாதியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) மறைந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்- க்கு (Jeffrey Epstein) சிறுமிகளை பாலியல் கொடுமை துன்புறுத்தல் செய்ய உதவியதற்கான தனது 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு மேல்முறையீடு செய்துள்ளதாக வியாழனன்று செய்தி வெளியாகி உள்ளது. அவரது வழக்கறிஞர் பாபி ஸ்டெர்ன்ஹெய்ம் (Bobbi Sternheim) கடந்த வாரம் இரண்டாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் பாலியல் துன்புறுத்தல் நடந்த சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சம்மதம் தெரிவிக்கும் வயதை […]

முன்னாள் சமூகவாதியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) மறைந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்- க்கு (Jeffrey Epstein) சிறுமிகளை பாலியல் கொடுமை துன்புறுத்தல் செய்ய உதவியதற்கான தனது 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு மேல்முறையீடு செய்துள்ளதாக வியாழனன்று செய்தி வெளியாகி உள்ளது. அவரது வழக்கறிஞர் பாபி ஸ்டெர்ன்ஹெய்ம் (Bobbi Sternheim) கடந்த வாரம் இரண்டாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் பாலியல் துன்புறுத்தல் நடந்த சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சம்மதம் தெரிவிக்கும் வயதை தாண்டியவர்கள் என்று அவரது சட்டக் குழு வாதிட்டுள்ளது. 1994 மற்றும் 2004 க்கு இடையில் நான்கு பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு நியூயார்க் நீதிபதி அலிசன் நாதன் கடந்த வாரம் 60 வயதானவருக்கு தண்டனை வழங்கியபோது மேக்ஸ்வெல்லின் குற்றங்களை கொடூரமானது என்று விவரித்தார். இறுதியில் மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் விசாரணையின் போது தோல்வியுற்றனர். மேக்ஸ்வெல்லின் நட்பு வட்டத்தில் ஒரு காலத்தில் பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபரும், ரியல் எஸ்டேட் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மற்றும் கிளிண்டன் குடும்பத்தினர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu