அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் உள்நாட்டின் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானவருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் திறப்பு விழாவையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து கும்பாபிஷேக விழாவை கிராம மக்கள் நேரடியாக கண்டுக்களிக்க திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்னொளி ஒளிர விட ரயில்வே அமைச்சகம் உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.