இந்திய வம்சாவளி டாக்டர் ஷீபா லூர்தஸ் அவர்களுக்கு உலகளாவிய சிறந்த பெண் பொறியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பன்முக தன்மை கொண்ட டாக்டர் ஷீபா லூர்தஸ் ஸ்வீடிஷ் என் ஆர் ஐ என்றாலும் அவர் தென் இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் யூனைட்டெட் சமாரிட்டன்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச தலைவரும், தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். இவர் யுனெஸ்காவின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் நிலையான சூழலுக்கான கிரியேட்டிவ் இன்ஜினியர்ஸ் என்ற கருப்பொருளின் கீழ் உலகளவு சிறந்த பெண் பொறியாளர் என்ற விருதை தற்போது பெற்றுள்ளார். மேலும் இவர் மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் ,கண்ணழகி மற்றும் கூந்தல் அழகி தென்னிந்தியா பட்டத்தை வென்றவர். அவை மட்டும் இன்றி இவர் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். தெற்காசியாவில் சாதனை திருப்புமுனை மற்றும் இரண்டு சர்வதேச நோபல் குடிமகன் விருதுகளையும் பெற்றுள்ளார்