உக்ரைன் போர் எதிரொலியாக உலக பொருளாதார வளர்ச்சி 3% கீழ் குறைகிறது - சர்வதேச நாணய நிதியம்

March 27, 2023

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3% க்கும் கீழ் குறைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். பீஜிங் நகரில் நேற்று நடைபெற்ற 2023 ம் ஆண்டுக்கான சீன பொருளாதார மாநாட்டில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். நிதித் துறையில் […]

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3% க்கும் கீழ் குறைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். பீஜிங் நகரில் நேற்று நடைபெற்ற 2023 ம் ஆண்டுக்கான சீன பொருளாதார மாநாட்டில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நிதித் துறையில் ‘நிலைத்தன்மை இல்லா’ சூழல் அதிகரித்து வருகிறது. மேலும், நிதித்துறைக்கான அபாயங்கள் அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை எதிர்கொள்ள, வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்படுகின்றன. மேலும், வங்கித்துறை அபாயகரமான நிலையில் இயங்கி வருகிறது. - இவ்வாறு மாநாட்டில் அவர் தெரிவித்தார். மேலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.2% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu