முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்திக்க அரசு முறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று இரவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அதன்படி இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.