பணியாளர் நலனில் இந்தியா இரண்டாம் இடம்

November 3, 2023

பணியாளர் நலன் குறித்து சர்வதேச நாடுகளில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. பிரபல சுகாதார நிறுவனமான மெக்கன்சி இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது. உடலளவில், மனதளவில் மற்றும் சமூக அளவில், தொழிலாளர்களின் நலன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 30000 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில், இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இந்தியா 76% மதிப்பெண் பெற்றுள்ளது. சர்வதேச அளவில், 78% மதிப்பெண்ணுடன் துருக்கி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, […]

பணியாளர் நலன் குறித்து சர்வதேச நாடுகளில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. பிரபல சுகாதார நிறுவனமான மெக்கன்சி இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
உடலளவில், மனதளவில் மற்றும் சமூக அளவில், தொழிலாளர்களின் நலன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 30000 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில், இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இந்தியா 76% மதிப்பெண் பெற்றுள்ளது. சர்வதேச அளவில், 78% மதிப்பெண்ணுடன் துருக்கி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக, 75% மதிப்பெண்ணுடன் சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஆய்வில், ஆச்சரியப்படும் விதமாக, ஜப்பான் 25% மதிப்பெண்களை பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில், ஜப்பான் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாற்று வேலை வாய்ப்பு தேடுவது ஜப்பானில் கடினமாக கருதப்படுவதால், இந்த கருத்துக்கணிப்பில் ஜப்பான் கடைசி இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu