2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச வணிக மதிப்பு வரலாற்று உச்சத்தை எட்டும் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், சர்வதேச வணிக மதிப்பு 12% உயர்ந்து, 32 ட்ரில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. ஆனால், உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக, 2023 ஆம் ஆண்டு, சர்வதேச வணிகம் குறையும் என்று கணிக்கப்படுவதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், விற்பனை பொருட்களின் வணிக மதிப்பு 10% உயர்ந்து, 25 ட்ரில்லியன் டாலர்களாகவும், சேவை சார்ந்த வணிகத்தின் மதிப்பு 15% உயர்ந்து, 7 ட்ரில்லியன் டாலர்களாகவும் பதிவாகியுள்ளது. ஆனால், இனி வரும் காலங்களில், உலக நாடுகளில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை, குறைவான பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் சர்வதேச கடன் மதிப்பு, உயரும் பணவீக்கம் போன்றவற்றால் வணிகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.