அதிக வெப்பமான மார்ச் மாதம் - 2023 க்கு இரண்டாம் இடம்

April 6, 2023

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்த மார்ச் மாத வெப்பநிலை அடிப்படையில், இந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மேலும், அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவிலும் இரண்டாவது இடம் எட்டப்பட்டுள்ளது. இது செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், வானிலை மையங்கள் அளித்த தகவல்களின்படி, கணினி மூலம் வகுக்கப்பட்ட தகவல் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பா பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான […]

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்த மார்ச் மாத வெப்பநிலை அடிப்படையில், இந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மேலும், அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவிலும் இரண்டாவது இடம் எட்டப்பட்டுள்ளது. இது செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், வானிலை மையங்கள் அளித்த தகவல்களின்படி, கணினி மூலம் வகுக்கப்பட்ட தகவல் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பா பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே வேளையில், வடக்கு ஐரோப்பாவில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வடக்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ரஷ்யா, ஆசியா, வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், தென் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவின் கடற்கரை ஓரங்கள் ஆகிய பகுதிகளில் சராசரிக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே வேளையில், வட அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் வெப்பநிலை குறைவாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதத்தில், “காலநிலை மாற்றம் குறித்த அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று ஐ நா எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu