மனித செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகின் நீர் சுழற்சி முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக நீரின் பொருளாதாரம் குறித்த உலகளாவிய ஆணையத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், “நன்னீர் ஆதாரங்கள் தவறாக நிர்வகிக்கப்படுவதால் மற்றும் நீர் மாசுபாடு அதிகரித்து வருவதால், உலகில் மூன்றில் ஒரு பகுதியான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உலகின் உணவு உற்பத்தியில் 50% க்கும் மேற்பட்ட பகுதி இந்த நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.” என்று கூறுகிறது.
இந்த அறிக்கை, தாவரங்கள் மற்றும் மண்ணில் இருக்கும் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டால், 2050 ஆம் ஆண்டுக்குள் ஏழை நாடுகளின் பொருளாதாரம் 15% வரை சரிந்து விடும் என்று எச்சரிக்கிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க, நீர் வளங்களை சரியாக நிர்வகிப்பது மற்றும் நீரின் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அறிக்கை வலியுறுத்துகிறது.