சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை வாகனங்களில் இணைக்க முயற்சி - ஜெனரல் மோட்டார்ஸ்

முன்னணி வாகன உற்பத்தியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம், சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை தனது வாகனங்களில் இணைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வாகனங்களில் சாட் ஜிபிடி யின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் துணை வேந்தர் ஸ்காட் மில்லர் அண்மையில் பேசி இருந்தார். அப்போது, “உலகத்தின் எதிர்காலம் சாட் ஜிபிடி கையில் உள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பங்களை கிரகித்து கொள்வது […]

முன்னணி வாகன உற்பத்தியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம், சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை தனது வாகனங்களில் இணைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வாகனங்களில் சாட் ஜிபிடி யின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் துணை வேந்தர் ஸ்காட் மில்லர் அண்மையில் பேசி இருந்தார். அப்போது, “உலகத்தின் எதிர்காலம் சாட் ஜிபிடி கையில் உள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பங்களை கிரகித்து கொள்வது அவசியம். அந்த வகையில், வாகனங்களில் சாட் ஜிபிடியை இணைக்க திட்டமிட்டுள்ளோம். சாட் ஜிபிடி மூலம், ‘வாகனங்களில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது?’ உள்ளிட்ட தகவல்கள் மேனுவலில் உள்ளது போன்று பயனர்களுக்கு வழங்கப்படும் நோக்கில் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu