ஞானவாபி மசூதி வழக்கு: கார்பன் டேட்டிங் கோரிக்கை நிராகரிப்பு

October 14, 2022

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிய இந்து அமைப்புகளின் கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது. ஞானவாபி மசூதி, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கவுரி அம்மன் உள்ளிட்ட இந்து கடவுள்களின் உருவங்களை ஆண்டு முழுதும் வழிபட அனுமதி கோரி, ஐந்து […]

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிய இந்து அமைப்புகளின் கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.

ஞானவாபி மசூதி, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கவுரி அம்மன் உள்ளிட்ட இந்து கடவுள்களின் உருவங்களை ஆண்டு முழுதும் வழிபட அனுமதி கோரி, ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில், 'வீடியோ' பதிவுடன் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, மசூதி வளாகத்தில் கடந்தாண்டு மே மாதத்தில் ஆய்வு செய்தது. அப்போது, மசூதியில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய, சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்தவும், அறிவியல் பூர்வமான ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் , இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று ஹிந்து அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu