ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

October 12, 2022

ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, இந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதியில் கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க கோரிய வழக்கை விசாரித்த ஞானவாபி […]

ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, இந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதியில் கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க கோரிய வழக்கை விசாரித்த ஞானவாபி மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பட்டது. கடந்த 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதிபதி விஷ்வேஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து வழிபாட்டாளர்கள் தீர்ப்பை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தீர்ப்பை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதோடு மூன்றாவது முறையாக இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu