சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்தது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, பின்னர் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து, தற்போது ஒரு சவரன் ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.56,560-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி இருந்தபோது, இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி, கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.99,000-க்கு விற்பனை ஆகிறது.