தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைவு

November 12, 2024

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.58,200-க்கும் விற்பனையாகியது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த நாளை விட மேலும் குறைந்துள்ளது. அதன்படி நேற்றைய விலையை ஒப்பிடும்போது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கும் தங்கம் விற்பனையாகிறது. தங்கம் விலைக்கான இவ்வாறான சரிவு, வெள்ளி […]

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.58,200-க்கும் விற்பனையாகியது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த நாளை விட மேலும் குறைந்துள்ளது. அதன்படி நேற்றைய விலையை ஒப்பிடும்போது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கும் தங்கம் விற்பனையாகிறது. தங்கம் விலைக்கான இவ்வாறான சரிவு, வெள்ளி விலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், நேற்றைய நிலவரத்தில் வெள்ளி விலை, முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu