மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை என்ற வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை $2698 ஆக உள்ளது.
கலவையான அமெரிக்க பொருளாதார தரவுகள் இருந்தபோதிலும், தங்கம் விலை வாரம் முழுவதும் 1.5% உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மத்திய வங்கிகளின் அதிகரித்த தங்கம் கொள்முதல் மற்றும் வரும் நவம்பர் 5 தேர்தலுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மாற்றியமைத்தது ஆகியவையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை 30% உயர்ந்துள்ளது. தற்போது சிங்கப்பூரில் தங்கம் $2,697.43 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. வெள்ளி மற்றும் பல்லேடியம் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், பிளாட்டினம் விலை மாற்றமின்றி நிலையாக உள்ளது.