ஏப்ரல் மாதம் முதல், 4 இலக்க ஹால்மார்க் தங்க நகை விற்பனைக்கு தடை

March 4, 2023

தங்க நகை விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல், 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும், 4 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகளின் விற்பனை தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசைச் சேர்ந்த நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்க நகைகளுக்கு வழங்கப்படும் முக்கியச் சான்றிதழ் 'ஹால்மார்க்' என்று அழைக்கப்படுகிறது. இந்த முத்திரை இல்லாத […]

தங்க நகை விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல், 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும், 4 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் நகைகளின் விற்பனை தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசைச் சேர்ந்த நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு வழங்கப்படும் முக்கியச் சான்றிதழ் 'ஹால்மார்க்' என்று அழைக்கப்படுகிறது. இந்த முத்திரை இல்லாத நகைகளை விற்க முடியாது. இந்த ஹால்மார்க் முத்திரை கொண்டு நகைகளின் தரம் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தங்கத்தின் தூய்மை அளவிடப்படும். அந்த வகையில், இந்த அறிவிப்பு முக்கியமானது. மேலும், நுகர்வோருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu