ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 மாவட்டங்களில் மொத்தம் 9 தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் பேரவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியச் சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குநரகம் நடத்திய ஆய்வில், தியோகார் கியோன்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய ஒடிசா மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கியோன்ஜஹார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், தியோகார் மாவட்டத்தில் 1 இடத்திலும் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 மாவட்டங்களில், கிட்டத்தட்ட 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒடிசா மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.