மேற்கு மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு மாலியில் ஒரு சட்டவிரோத தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 1800 பேர் இருந்ததாக கூறப்படுகின்றனர். நிலச்சரிவினால் சுரங்கம் முறிந்து விழுந்ததில், சிலர் தண்ணீரில் விழுந்தனர். இந்த விபத்தினை உறுதிப்படுத்திய அதிகாரிகள், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் நிலச்சரிவில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.














