தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,580-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,448-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 0.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,800 ஆக உள்ளது.