இன்று தங்கத்தின் விலையில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய தினத்தில், ஒரு கிராம் தங்கம் 5870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து, 46960 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இது தங்கத்தின் விலையில் புதிய உச்சமாகும். தங்கம் விலை உயர்ந்தது போல, வெள்ளியும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 82.2 ரூபாயாக உள்ளது.