தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து உள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை ரூ.280 உயர்ந்து சவரன் 54 ஆயிரத்து 200க்கு விற்பனையானது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து ஒரு கிராம் 6730 க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் 101 விற்பனை செய்யப்பட்டு வருகிறது