தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1160 குறைவு

April 23, 2024

தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஆன போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயர்ந்தது. இதன் மூலம் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உட்சத்தை அடைந்தது. கடந்த மாதம் இறுதியில் பவுன் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து உயர்ந்தபடியே […]

தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஆன போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயர்ந்தது. இதன் மூலம் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உட்சத்தை அடைந்தது. கடந்த மாதம் இறுதியில் பவுன் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்த நிலையில் தற்போது 55,000 வரை பவுன் விலை தாண்டியது ஏற்கனவே. இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூபாய் 320 குறைந்து 54 ஆயிரத்து 760 க்கு விட்டது. ஒரு கிராம் 6845 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிரடியாக ஒரே நாளில் ரூபாய் 1,160 குறைந்து பவுன் ரூபாய் 54 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 53,600 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 245 குறைந்து 6,700 ஆக உள்ளது. தங்கத்தின் விலை போல வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டது. வெள்ளி கிலோவிற்கு 2500 குறைந்து 86,500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 86.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu