தங்கம் விலையில் இன்று புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 45000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வங்கித் துறை சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ரெப்போ வட்டி விகிதங்களை மத்திய ரிசர்வ் வங்கி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 90 ரூபாய் அதிகரித்து, 5690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 720 ரூபாய் அதிகரித்து, 45520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று 49336 ஆக உள்ளது. அதே வேளையில், ஒரு கிராம் வெள்ளி 80.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.