தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும் அதிகளவு விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. இதனால் இன்று பவுன் ரூ 41 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.
பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்தளவு உயர்ந்து இருப்பதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்தனர். தங்கம் உச்சத்தை தொட்டு உள்ளதால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.