கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றன. சென்னையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் ரூ.8,010-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.64,080-க்கும் விற்பனை ஆனது. ஆனால், நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 சரிந்து ரூ.7,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனை ஆனது.
இன்று, தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. தற்போது, ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.63,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், பார் வெள்ளி ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது