சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி வரலாற்றிலேயே முதல்முறையாக ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 50 ஆயிரத்தை எட்டியது. அதன் மறுநாள் ரூபாய் 51,120 க்கும், அதன் பின்னர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ரூபாய் 50,960 க்கும், 1ஆம் தேதி 51,640க்கும், நேற்று 51,540க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 52,000 ஆகவும், கிராமுக்கு ரூபாய் 70 உயர்ந்து ஒரு கிராம் 6500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.














