தங்கம் விலை தொடர்ந்து குறைவதால் நகைச் சந்தையில் பரபரப்பு நிலவுகிறது. வெள்ளி விலையும் சரிவடைந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 16ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.9,275க்கும், ஒரு சவரன் ரூ.74,200க்கும் விற்பனையானது. அதன் பின்னர் விலை நிலைத்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880க்கும் விற்பனையானது. இன்றும் விலை சரிவு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ.125க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,25,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.














