சென்னையில் ஆபரதங்கத்தின் பிழை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை அதிகரித்து வந்தது. அன்றைய தினம், ஒரு கிராம் தங்கம் ரூ.7,455-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் இதுவரை இல்லாத அளவில் தங்கம் விலை வரலாற்றில் ஒரு உச்சமாக இருந்தது. இதற்கிடையே தங்கத்தின் விலையில் ஏற்கனவே விலை உயர்ந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. 3 நாட்களாக விலை அதே நிலைமையில் இருந்து வருகிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன், வெள்ளி விலை விற்பனையில் ரூ.1 குறைந்துள்ளது, எனவே வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.














