நேற்று குறைந்த தங்க விலை, இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு; வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தங்கம் விலை தினமும் ஏற்ற, இறக்கமாக மாறி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.680 உயர்வு, அதனைத் தொடர்ந்து சவரனுக்கு ரூ.160 மற்றும் ரூ.640 உயர்வு ஆகியவற்றால், ஒரு சவரன் தங்கம் ரூ.78,440-க்கு சென்றது. இது வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக அமைந்தது. ஆனால் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, தங்கம் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிரடி உயர்வை கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.78,920-க்கும் விற்பனையாகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.137க்கும் பார் வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.














