தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது ஒரு சவரனுக்கு ரூ.64, 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது. பின்னர், கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் நிலைத்திருந்தது. ஆனால் நேற்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,080-க்கு விற்பனையானது.
இன்று, தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,065-க்கு, சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், பார் வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.