இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்ததும், பிறகு சற்று குறைந்ததும் நாம் பார்த்தோம். கடந்த 13-ம் தேதி ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்றது. அதற்கு பிறகு விலை குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கும் ஒரு கிராம் ரூ.9,200-க்கும் விற்றது. ஆனால் இன்று தங்கம் மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.74,000 ஆகவும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கூட ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.122 ஆகி உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,22,000-க்கு விற்கப்படுகிறது.