இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாம் முறை உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே போகிறது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.71,200 ஆக இருந்தது. இன்று காலை விலை பெரிதும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,025 மற்றும் ஒரு சவரன் ரூ.72,200 ஆக உயர்ந்தது. அதன் பின்னரும் மேலும் ரூ.600 அதிகரித்து தற்போது ஒரு சவரன் ரூ.72,800 மற்றும் ஒரு கிராம் ரூ.9,100 ஆக விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.111 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.