சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஆங்கில புத்தாண்டில் இருந்து தொடர்ந்து உயர்ந்திருந்தது. கடந்த வார இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.57,720-க்கு விற்பனையாகி, இந்த வாரமும் அதே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சிறிது அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதோடு, ஒரு கிராம் தங்கம் ரூ.7,225-க்கு விற்பனையாகின்றது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.