சர்வதேச சந்தை மாற்றங்களை எதிரொலியாக இந்தியாவில் தங்க விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது.
முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கு விற்பனையான நிலையில், நேற்றை நிலையில் இது ரூ.9,010 ஆகக் குறைந்தது. அதேபோல், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையாயிற்று. ஆனால், இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.9,060-க்கும், ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.120 என்றும் பார் வெள்ளி ரூ.1,20,000 என்றும் விற்பனை நிலவரம் தொடர்கிறது.