கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபத்தில் 62% சரிவும், வருவாயில் 8% சரிவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தையில், பல்வேறு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது மற்றும் இதர கையகப்படுத்தல் நடவடிக்கைகள் போன்றவற்றில் கோல்ட்மேன் சாக்ஸ் ஈடுபட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த காலாண்டில் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் மாத இறுதியில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் லாபம் 1.1 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 10.9 பில்லியன் டாலர்களாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான பின்னர், அமெரிக்க பங்கு சந்தையில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.1% சரிந்து ஒரு பங்கு 336.95 டாலர்களுக்கு வர்த்தகமானது.














