2023 ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.9% - கோல்ட்மேன் சாச்ஸ் கணிப்பு

November 21, 2022

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்று பெயரெடுத்த இந்தியாவின் வளர்ச்சி, 2023 ஆம் நிதி ஆண்டில் குறையும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது. முன்னதாக, 6.9% ஆக கணிக்கப்பட்ட இந்தியாவின் ஜிடிபி, தற்போது 5.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில், குறைவான வளர்ச்சி விகிதமும், அடுத்த பாதியில் வேகமான வளர்ச்சி விகிதமும் இருக்கும் என்று பிரபல மதிப்பீட்டு நிறுவனம் கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.8% ஆக இருக்கும் […]

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்று பெயரெடுத்த இந்தியாவின் வளர்ச்சி, 2023 ஆம் நிதி ஆண்டில் குறையும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது. முன்னதாக, 6.9% ஆக கணிக்கப்பட்ட இந்தியாவின் ஜிடிபி, தற்போது 5.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில், குறைவான வளர்ச்சி விகிதமும், அடுத்த பாதியில் வேகமான வளர்ச்சி விகிதமும் இருக்கும் என்று பிரபல மதிப்பீட்டு நிறுவனம் கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 6.1% ஆக குறையும் என்று தெரிவித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து அடுத்து சில மாதங்களுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6% விளிம்பு நிலையை தாண்டியே பணவீக்கம் பதிவாகும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வருடாந்திர ஜிடிபி வளர்ச்சி 2022 ஆம் நிதி ஆண்டில் 7.2% ஆக இருந்தது. அது, 2023 ஆம் ஆண்டில் 4.7% ஆக இருக்கும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu