வால் ஸ்ட்ரீட் பகுதியில் முக்கிய வங்கி சார்ந்த நிறுவனமாக கோல்ட்மேன் சாச்ஸ் அறியப்படுகிறது. இந்நிலையில், நஷ்டத்தில் இயங்கி வரும் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில், கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனத்தில் 49100 ஊழியர்கள் பணியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் போது நிறைய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு முந்தைய ஊழியர்கள் எண்ணிக்கை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிட்டத்தட்ட 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், வங்கி சார்ந்த இந்த நிறுவனம், இழப்புகளை சமாளிக்க, 4000 பேர் வரை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.