2.3 பில்லியன் டாலர்கள் கேட்டு கூகுள் மீது வழக்கு தொடர்ந்த ஐரோப்பிய ஊடகங்கள்

February 29, 2024

கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பாவின் 32 ஊடக நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பர உத்தியால் ஊடகங்களுக்கு மிகப்பெரிய இழப்பு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் நிறுவனம் 2.3 பில்லியன் டாலர்கள் தொகையை செலுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஹங்கேரி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்கள் கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளன. தனது, […]

கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பாவின் 32 ஊடக நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பர உத்தியால் ஊடகங்களுக்கு மிகப்பெரிய இழப்பு நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் நிறுவனம் 2.3 பில்லியன் டாலர்கள் தொகையை செலுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஹங்கேரி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்கள் கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளன. தனது, அதிகாரத்தை பயன்படுத்தி, மற்ற ஊடக நிறுவனங்களின் விளம்பர வளர்ச்சியை கூகுள் பறித்துக் கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவு சார்ந்த விளம்பரங்களைக் கொண்டு வருவதில் சிக்கலை சந்தித்து வரும் கூகுள் நிறுவனத்துக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu