கூகுள் மீட்டில் 360 டிகிரி வீடியோ பேக்ரவுண்ட் - புதிய அறிவிப்பு

February 20, 2023

கூகுள் மீட் பயனாளர்களுக்கு, தங்கள் கைபேசியிலிருந்து 360 டிகிரி வீடியோ பேக்ரவுண்ட் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கைப்பேசிகளைப் பயன்படுத்தும் கூகுள் மீட் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், கூகுள் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்மையில், எடிட் செய்யும் வகையிலான விட்ஜெட்டுகள் சாட் ஆப் கார்டில் அறிமுகம் செய்யப்பட்டன. […]

கூகுள் மீட் பயனாளர்களுக்கு, தங்கள் கைபேசியிலிருந்து 360 டிகிரி வீடியோ பேக்ரவுண்ட் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கைப்பேசிகளைப் பயன்படுத்தும் கூகுள் மீட் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்களின் வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், கூகுள் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்மையில், எடிட் செய்யும் வகையிலான விட்ஜெட்டுகள் சாட் ஆப் கார்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, 360 டிகிரி வீடியோ பேக்ரவுண்ட் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வீடியோ அழைப்புகளின் போது, மொபைல் கருவியின் கைரோஸ்கோப் துணைக் கொண்டு, வீடியோ பேக்ரவுண்டுகள் இயக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், பயனர் ஒருவரின் பேக்ரவுண்ட் காட்சி வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், குடிமக்களின் தரவுகளை விற்பனை செய்வதாக, பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டிய 14 செயலிகள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu