கூகுள் நிறுவனத்தின் பார்டு - ஜெமினி என பெயர் மாற்றம்

February 5, 2024

கூகுள் நிறுவனம் பார்டு என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனத்தை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில், பார்டு என்ற பெயர் ஜெமினி என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, ஜெமினி என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்தது. அத்துடன், பார்டு கருவியில் ஜெமினி தொழில்நுட்பத்தை அண்மையில் இணைத்தது. தற்போது, ஒருங்கிணைந்த முறையில், பார்டு சாதனம் ஜெமினி என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரல்வழி உரையாடல்களை […]

கூகுள் நிறுவனம் பார்டு என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனத்தை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில், பார்டு என்ற பெயர் ஜெமினி என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, ஜெமினி என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்தது. அத்துடன், பார்டு கருவியில் ஜெமினி தொழில்நுட்பத்தை அண்மையில் இணைத்தது. தற்போது, ஒருங்கிணைந்த முறையில், பார்டு சாதனம் ஜெமினி என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் புதிய ஜெமினி அட்வான்ஸ்டு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. எனினும், கூகுள் தரப்பிலிருந்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu