கூகுள் குரோம் தேடுபொறியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக இந்திய கணினி அவசர நிலை உதவி குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கூகுள் குரோம் தேடுபொறி தான் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேடுபொறியின் குறிப்பிட்ட வெர்ஷன் களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய கணினி அவசர நிலை உதவி குழு இதனை தெரிவித்துள்ளது. விண்டோஸ் இயங்குதளத்திற்கான 118.0.5993.70 , 118.0.5993.71 மற்றும் அதற்கு முந்தைய கூகுள் குரோம் பதிப்புகளில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஐமேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் 118.0.5993.70 க்கு முந்தைய கூகுள் குரோம் பதிப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுப்பிக்கப்பட்ட கூகுள் குரோம் வெர்ஷனை பயன்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.