செயற்கை நுண்ணறிவு வரவு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில், மனிதனைப் போலவே வீடியோ கேம்களை விளையாடும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஒன்றை கூகுள் நிறுவனத்தின் டீப் மைண்ட் வெளியிட்டுள்ளது. சீமா (SIMA) என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி SCALABLE INSTRUCTABLE MULTI-WORLD AGENT என்பதன் சுருக்கமாகும்.
மனிதர்கள் பேசும் இயல்பான மொழியில் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப இந்த செயற்கை நுண்ணறிவு கருவி செயல்படுகிறது. அதாவது, பொதுவாக கேம் விளையாடுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கணினி பாட்டுகளை போல தானாக இது செயல்படாது. ஒரு மனிதன் எவ்வாறு செயல்படுவான் என்பதை ஆய்வு செய்து 600 அடிப்படை திறன்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இது மனிதனைப் போலவே யோசித்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.